Thursday, October 15, 2020

Yamunotri -Maa Yamuna Devi Temple Yathirai(யாமுனோத்ரி  யாத்திரை)

சிறிய சார்தாம் யாத்திரையில் நாங்கள் முதலில் சென்ற இடம் யமுனோத்ரி ,இமாலயத்தின்  கார்வால் பகுதியில் அமைந்துள்ளது யமுனோத்ரி.கடல் மட்டத்தில் இருந்து 2,650 mts உயரத்தில் உள்ளது. நாங்கள் சென்றபோது ஹனுமன் சட்டி  இருந்து நடைபயணமாக சென்றோம்,ஆனால் இப்பொழுது ஜானகி சட்டி வரை பாதை போட்டு உள்ளனர் ,ஜானகி சட்டியில் வெந்நீர் ஊற்று உள்ளது,இங்கே நிறைய வடமாநிலத்தவர்கள்  அரிசி மற்றும் உருளை கிழங்கு எடுத்துவந்து அந்த சூடான வெனீர் ஊற்றில் போட்டு சமைத்து சாப்பிடுகின்றனர் நாங்கள் ஹனுமன் சட்டி சென்று பின்னர் அங்குயிருந்து 14 கிலோமீட்டர்கள் குதிரையில் அல்லது  டோலியிலோ அல்லது நடைபயணம் செய்து அடையவேண்டும்.


 

இந்த ஆலயமும் வருடத்தில் அக்ஷய த்ரிதியை அன்று திறந்து தீபாவளி அன்று கோவில் நடை சாத்தப்படும் மற்ற மூன்று ஆலயம் போல சங்கியா என்னும் இடத்தில யமுனை  நதி உற்பத்தி ஆகிறது பண்டர்பூந்ச் என்னும் மலையில். ஹனுமன் சட்டி குதிரையில் ஏறி யமுனோத்ரி மூன்று மணி நேரம் கழித்து சென்றடைந்தோம்.யமுனோத்ரியிலும் ஷூ ,சாக்ஸ் ,உள்ளன் ஸ்வெட்டர் வேண்டும் இல்லையெல் குளிர் தாங்குவது கடினம் ,பாதை நாங்கள் சென்றபோது 2013 ஜூன் மாதத்தில் குதிரை ஏற்றமும் அதே பாதை நடைப்பதையும் அதே பாதை தான் ஆனால் போகும் வழி எங்கும் சூரியனின் ஒளி கூட தெரியாவண்ணம் சீதோஷண நிலை இருக்கும் ஹனுமன் சட்டி முதலே ,போகும் பாதை கூட இயற்கையான மேகங்கள் பச்சை பசேல் மலைகளோடு அருமையான காட்சியாக இருக்கும்.


யமுனை கோவிலின் அருகே சூரியனின் நீர் ஊற்றாய் ஒரு வெந்நீர் ஊற்று , மொத்ததில் மலை ஏற 3 மணி நேரம் இறங்க 3 மணி நேரம்.


Monday, September 21, 2020

Gangothri -Maa Ganga Devi temple(கங்கோத்ரி -அன்னை கங்காதேவி ஆலயம்)

Gangothri (கங்கோத்திரி)


ஈசனின் அருளால் அனைவருக்கும் வணக்கம் ,
எங்களது  சிறிய சார்தாம்   யாத்திரையில்(முதலாவதாக யமுனோத்ரி ,இரண்டாவதாக சென்றது கங்கோத்ரி),  விடிய காலையில் பயணமானோம்,தேவதாரு மர காற்று எங்கள்மீது பட ,காலை 5.30am ஆரம்பித்த பயணம் காலை 8.30am க்கு கங்கோத்ரி வந்தடைந்தோம்.அதன்பின்னர் ஒரு 20 நிமிட நடைக்கு பின் கங்காதேவி ஆலயம் வந்தடைந்தோம்,இறங்கியத்திலிருந்து ஒரு 10 நிமிட பயணத்திற்குப்பின் இடதுபக்கம் ஒரு வழி வருகிறது அது தான் கோமுக் செல்லும் வழி என்று சொன்னார்கள் ,பிறகு வழிநெடுக்க ஆன்மிக பொருட்கள் விற்கும் கடைகள்(பஞ்சலோக சிலைகள்,ருட்ராக்ஷங்கள் ,ருத்ரக்ஷ மாலைகள்,நவரத்ன மாலைகள் ,நிறைய) ,கோவில் நெருங்க நெருங்க ஒருவித மென்மையான குளிர் உணர்தோம் என்னுள் கங்காதேவியை தரிசனம் செய்யப்போகிறோம் என்று நாம் என்ன புண்ணியம் செய்தோமோ என்று ,சரியாக 9.45am கோவிலை அடைந்தபோது அங்கே கூட்டம் நிறையவே, அதனால்
கட்டணம் கட்டி 100 ரூபாய் ஒரு ஆளிற்கு கட்டணம் கட்டிய பின் தரிசனம் செய்து பின்னர் அந்த சந்நிதிக்கு எதிரே கங்கை நதிக்கரை ,தண்ணீரில் கை வைத்தால் சரியான குளிர் தலையில் தெளித்து கொண்டு வண்டிக்கு வந்து ஏறினோம்,வண்டிக்கு திரும்பவும் வழியில் ஒரு சிற்ப காட்சி கங்காதேவி சிவபெருமானின் தலையில் அமர்வதுபோல ஒரு சிற்பம் அதுற்கு நேராய் நந்திபகவான்சிலை ,சரியாக நந்திபகவான் சிலை கைலாயம் நோக்கி உள்ளதை மொபைல் கூகிள்  மேப்ஸ் வழியாக பார்த்தேன் ,பிறகு தான் நாங்கள்கேதராம் நோக்கி பயணம் ஆனோம்.