Gangothri (கங்கோத்திரி)
ஈசனின் அருளால் அனைவருக்கும் வணக்கம் ,
எங்களது சிறிய சார்தாம் யாத்திரையில்(முதலாவதாக யமுனோத்ரி ,இரண்டாவதாக சென்றது கங்கோத்ரி), விடிய காலையில் பயணமானோம்,தேவதாரு மர காற்று எங்கள்மீது பட ,காலை 5.30am ஆரம்பித்த பயணம் காலை 8.30am க்கு கங்கோத்ரி வந்தடைந்தோம்.அதன்பின்னர் ஒரு 20 நிமிட நடைக்கு பின் கங்காதேவி ஆலயம் வந்தடைந்தோம்,இறங்கியத்திலிருந்து ஒரு 10 நிமிட பயணத்திற்குப்பின் இடதுபக்கம் ஒரு வழி வருகிறது அது தான் கோமுக் செல்லும் வழி என்று சொன்னார்கள் ,பிறகு வழிநெடுக்க ஆன்மிக பொருட்கள் விற்கும் கடைகள்(பஞ்சலோக சிலைகள்,ருட்ராக்ஷங்கள் ,ருத்ரக்ஷ மாலைகள்,நவரத்ன மாலைகள் ,நிறைய) ,கோவில் நெருங்க நெருங்க ஒருவித மென்மையான குளிர் உணர்தோம் என்னுள் கங்காதேவியை தரிசனம் செய்யப்போகிறோம் என்று நாம் என்ன புண்ணியம் செய்தோமோ என்று ,சரியாக 9.45am கோவிலை அடைந்தபோது அங்கே கூட்டம் நிறையவே, அதனால்
கட்டணம் கட்டி 100 ரூபாய் ஒரு ஆளிற்கு கட்டணம் கட்டிய பின் தரிசனம் செய்து பின்னர் அந்த சந்நிதிக்கு எதிரே கங்கை நதிக்கரை ,தண்ணீரில் கை வைத்தால் சரியான குளிர் தலையில் தெளித்து கொண்டு வண்டிக்கு வந்து ஏறினோம்,வண்டிக்கு திரும்பவும் வழியில் ஒரு சிற்ப காட்சி கங்காதேவி சிவபெருமானின் தலையில் அமர்வதுபோல ஒரு சிற்பம் அதுற்கு நேராய் நந்திபகவான்சிலை ,சரியாக நந்திபகவான் சிலை கைலாயம் நோக்கி உள்ளதை மொபைல் கூகிள் மேப்ஸ் வழியாக பார்த்தேன் ,பிறகு தான் நாங்கள்கேதராம் நோக்கி பயணம் ஆனோம்.