Yamunotri -Maa Yamuna Devi Temple Yathirai(யாமுனோத்ரி யாத்திரை)
சிறிய சார்தாம் யாத்திரையில் நாங்கள் முதலில் சென்ற இடம் யமுனோத்ரி ,இமாலயத்தின் கார்வால் பகுதியில் அமைந்துள்ளது யமுனோத்ரி.கடல் மட்டத்தில் இருந்து 2,650 mts உயரத்தில் உள்ளது. நாங்கள் சென்றபோது ஹனுமன் சட்டி இருந்து நடைபயணமாக சென்றோம்,ஆனால் இப்பொழுது ஜானகி சட்டி வரை பாதை போட்டு உள்ளனர் ,ஜானகி சட்டியில் வெந்நீர் ஊற்று உள்ளது,இங்கே நிறைய வடமாநிலத்தவர்கள் அரிசி மற்றும் உருளை கிழங்கு எடுத்துவந்து அந்த சூடான வெனீர் ஊற்றில் போட்டு சமைத்து சாப்பிடுகின்றனர் நாங்கள் ஹனுமன் சட்டி சென்று பின்னர் அங்குயிருந்து 14 கிலோமீட்டர்கள் குதிரையில் அல்லது டோலியிலோ அல்லது நடைபயணம் செய்து அடையவேண்டும்.
இந்த ஆலயமும் வருடத்தில் அக்ஷய த்ரிதியை அன்று திறந்து தீபாவளி அன்று கோவில் நடை சாத்தப்படும் மற்ற மூன்று ஆலயம் போல சங்கியா என்னும் இடத்தில யமுனை நதி உற்பத்தி ஆகிறது பண்டர்பூந்ச் என்னும் மலையில். ஹனுமன் சட்டி குதிரையில் ஏறி யமுனோத்ரி மூன்று மணி நேரம் கழித்து சென்றடைந்தோம்.யமுனோத்ரியிலும் ஷூ ,சாக்ஸ் ,உள்ளன் ஸ்வெட்டர் வேண்டும் இல்லையெல் குளிர் தாங்குவது கடினம் ,பாதை நாங்கள் சென்றபோது 2013 ஜூன் மாதத்தில் குதிரை ஏற்றமும் அதே பாதை நடைப்பதையும் அதே பாதை தான் ஆனால் போகும் வழி எங்கும் சூரியனின் ஒளி கூட தெரியாவண்ணம் சீதோஷண நிலை இருக்கும் ஹனுமன் சட்டி முதலே ,போகும் பாதை கூட இயற்கையான மேகங்கள் பச்சை பசேல் மலைகளோடு அருமையான காட்சியாக இருக்கும்.
யமுனை கோவிலின் அருகே சூரியனின் நீர் ஊற்றாய் ஒரு வெந்நீர் ஊற்று , மொத்ததில் மலை ஏற 3 மணி நேரம் இறங்க 3 மணி நேரம்.