Monday, May 6, 2019

Kedarnath Yatra( கேதார்நாத் யாத்ரா) கேதார்நாத் யாத்திரை (2013) மே மாதம் My 1st travelogue

                                                                     
 அனைவருக்கும் வணக்கம் ,

ஈசனின் அருளால் இந்த வலை பூ  இன்று முதல்,  எனது ஆன்மிக யாத்திரை அனுபவம் ,தகவல்கள்.
 முதல் முதலில் நாம் காண இருப்பது கேதார்நாத் யாத்திரை.

கேதார்நாத் யாத்திரை (2013) மே மாதம் 
எங்களது  சிறிய சார்தாம்   யாத்திரையில்(முதலாவதாக யமுனோத்ரி ,இரண்டாவதாக சென்றது கங்கோத்ரி), மூன்றாவதாக  சென்ற  கோவில்  கேதார்நாத் யாத்திரை ஆகும்  மற்ற மூன்று  கோவில்களும்  பின் வரும் பதிவுகளில்  பார்ப்போம் .

முதலில்  நாங்கள்  கேதார்நாத்  மலை  அடிவாரமான  கௌரிகுண்ட்  சென்றடைந்தோம்  பஸ்சில் , கௌரிகுண்டத்தில் இயற்கையாக வெந்நீர்  ஊற்று    சில ஆயிரம்  வருடங்களுக்கு முன் தாய்  பார்வதி  தேவியால்  உருவாக்கப்பட்டது(தற்போது அங்கே வெந்நீர் ஊற்று இல்லை ,2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் அழிந்துவிட்டது).


நானும் , எனது தாய் மற்றும் தந்தை , அங்கே நீராடிவிட்டு எங்களது பயணத்திற்கு தயாரானோம், கேதார்நாத் மலையில் பதினான்கு கிலோமீட்டர்கள் நடந்தோ  அல்லது  டோலி மூலமாகவோ  அல்லது குதிரை மூலமாக தான்  செல்லமுடியும் , அது ஒரு மலை பகுதி என்பதால் அங்கே சில பேருக்கு சுவாச பிரச்சனை வரும் என்று மலை அடிவாரமான கௌரிகுண்டத்திலியே எங்களை ஆக்ஸிஜன் உருளை,மற்றும் கற்பூரம் தேவைப்படும் என்று கௌரிகுண்டத்தில் சொன்னார்கள்.(சுவாச கோளாறு,ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் , வயதானோர்கள் ), கௌரிகுண்டத்தில்,கற்பூரம் ஆக்ஸிஜன் உருளைவிற்பனை செய்கிறார்கள்.

அங்கே நம்முடைய எடைக்கு ஏற்றவாறு டோலி  மற்றும் டோலி கட்டணம் அதற்கு ஏற்றவாறு இருக்கும், மற்றும் டோலிக்காக நம்முடைய எடையை பார்க்கிறார்கள் , நம்முடைய எடைக்கு ஏற்றவாறு எத்தனை நபர்கள் டோலி தூக்க வேண்டும், கட்டணம்  என்பதை தீர்மானிக்கிறார்கள், இங்கே அதற்கு என்று அலுவலகம் உள்ளது . நானும் என்னுடைய அப்பாவும் குதிரையில் சென்றோம் , என்னுடைய அம்மா டோலியில் வந்தார்.
டோலிக்கு கட்டணம் 6000 ரூபாய்(மலை ஏற மற்றும் இறங்க சேர்த்து) , குதிரைக்கு 4500 ரூபாய் ஒரு நபருக்கு,மலை ஏற  மற்றும் இறங்க, சரியாக காலை 11 மணிக்கு ஏற ஆரம்பித்து மதியும் 3 மணிக்கு சென்றடைந்தோம் , இடையில் தேநீர் ,உணவு சாப்பிட்டுக்  கொள்ளலாம், அந்த நேரத்தில் குதிரைக்கும் மேய்பவர்களுக்கும் நாம்  தேநீர் வாங்கி கொடுக்கலாம்,குதிரைக்கும் உணவு கொடுப்பார்கள் ,வெல்லத்தை  குதிரைக்கு  உணவாக கொடுக்கிறார்கள் மற்றும் டோலியில் சென்றால் டோலி தூக்கும் நபர்களுக்கு தேனீர் அல்லது உணவு வாங்கி கொடுக்கலாம், குறிப்பு:- இந்த மலை ஏற்றத்தில் கடைகளில் நூடுல்ஸ் மற்றும் தேநீர் தான் உணவாக கிடைக்கும்(மலை ஏற்றத்தில் ஏறும் பாதையில்).


மதியம் 3 மணிக்கு மலைமேல் சென்றடைந்தோம்,கேதார்நாத் மலையின் மேல் கிடைக்கும் உணவுகள் பரோட்டா ,அவல் பொரி ,சமோசா,மட்டுமே கிடைக்கும் ,சரியாக நானும் என் அப்பாவும் 3 மணிக்கு சென்றடைந்தோம் , அந்த நேரம் கேதார்நாத் ஸந்நிதி மூடி இருந்தது ,4.30 மணிக்கு திறப்பார்கள் என்று சொன்னார்கள் , அதற்குள் ஒரு அற்புதம் நிகழ்ந்தது கடல் மட்டத்திலிருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது, அதனால் எங்கள் அருகே புகை ஒன்று வந்தது , நாங்கள் அந்த நேரம்  கேதார்நாத் ஸந்நிதி தரிசன வரிசையில்  தரிசனத்திற்க்காக காத்து இருந்தோம் , அதற்கு பின் மழை என்னவென்று கேட்டால் , எங்களை கடந்த சென்றது தான் மேகம் மழையாய்  பொழிகிறது என்றார்கள் , இந்த வானிலையால் தான் இன்றும் ஹெலிகாப்டரில் கேதார்நாத் வரவேண்டும் என்றால் ஒரு நிலையாக சொல்ல முடிவதில்லை , ஏன் என்றால் மழை அடித்தால் ஹெலிகாப்டர் இயக்குவது கடினம் (இங்கே இயற்கை தீர்மானிக்கிறது).

 


மாலை 4.15மணி இருக்கும் அப்போதுதான் ஸந்நிதி திறந்தார்கள் , உள்ளை சென்றபோது முதலில் நந்தி சிலை , அதைக்கடந்து உள்ளே சென்றால் பஞ்ச  பாண்டவர்கள் , அதுற்கு அடுத்து ருத்திராக்ஷம் மாலை அணிந்த கிருஷ்ணர்  சிலை ,இந்த உலகில் அதிகம் காண முடியாத அறிய காட்சி ருத்திராக்ஷம் மாலை  அணிந்த கிருஷ்ணர் சிலை எனக்கு ஆச்சர்யம், அதன் பின் கேதார்நாத் ஸந்நிதி அதை முடித்து வெளியே வந்தோம்.

அன்று இரவு கேதார்நாத் மலையிலே தங்கினோம் நாங்கள் மூவரும் தங்கியே அறையில் இரவு முழுவதும் குளிர் உணர்ந்தோம் ,நல்ல வேலையாக டெல்லியில் வாங்கிய ஸ்வெட்டர் , ஸ்வெட்டர் துணியால் செய்த கை உறை அணிந்திருதோம் , அப்படியும் குளிர் உணர்தோம் இரவு முழுதும், காலை எழுந்து குளிக்கலாம் என்றால் சரியான  குளிர்  அதனால்  அப்படியே கவுரிகுண்டம் குதிரையில்இறங்கினோம் காலை 9 மணிக்கு  1 மணிக்கு கௌரிகுண்டம் வந்தடைந்தோம்.

அதன்பிறகு நாங்கள் ராம்பூரில்  மத்திய உணவு சாப்பிட்டோம், அடுத்து 
ராம்பூரிலிருந்து ஜோஷிர்மட்ற்கு மாலை 4 மணிக்கு சென்றடைத்தோம்.

வழிநெடுகிலும் நல்லமழை பொழிந்தது ,மலைச்சரிவு ஏற்பட்டது ,வெள்ளம் கரைபுரண்டுஓடியது , அதனால் போக்குவரத்தும் பாதிப்படைந்தது .இது போல அடிக்கடி இயற்கைசீற்றம் ஏற்படுமாம் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத்திலும் , அங்க உள்ள கல்வெட்டில் உள்ளது .






1 comment: